Saturday, March 31, 2012

உடல் நலமும்


தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும்

கலை......இந்த நிலைமையில் முறையின்றி தண்ணீர் குடித்தால் அது மனிதரின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம்.கிளீட்டஸ்.....ஒழுங்கான முறையில் ஒருவருக்கு நாளுக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது?எந்த நிலைமையில் சாதாரண நாட்களில் குடிக்கும் அளவை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்?கலை இதில் அறிவியல் ஆதாரம் உண்டா?
கலை......உண்டு. ஆய்வாளர்கள் இதை பற்றி ஆராய்ந்த பின் மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
கிளீட்டஸ்.....அப்படி என்றால் எப்படி சரியான முறையில் தண்ணீர் குடிக்க வேண்டும்?எந்த நேரத்தில் தண்ணீரை குடிக்க வேண்டும். தாகம் இருந்த போது தண்ணீர் குடிப்பது நல்லது என்று பலர் கருதுகின்றனர். அப்படித்தானா?
கலை.....நீங்கள் கேட்பது மக்கள் தெரிய விரும்பிய கேள்விகள் தான். இது பற்றி நான் விளக்கிக் கூறுவது அறிவியல் ஆதாரம் குறைவு. டாக்டர் லீ இது பற்றி எங்களுக்கு விளக்கி கூற விடுகின்றோம்.
கிளீட்டஸ்......தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை ஏற்கனவே நிலவியது. தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும். தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார் அவர்.
கலை......ஆகவே தண்ணீர் எப்படி அறிவியல் முறையில் குடிப்பது என்பது மக்கள் வாழ்க்கையில் கவனிக்க வேண்டிய விடயமாகும். இங்கே அறிவியல் முறையில் தண்ணீர் குடிக்கும் வழிமுறை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
கிளீட்டஸ்.....விபரமாக சொல்லுங்கள்.
கலை......காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.
கிளீட்டஸ்.....ஏன் காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
கலை.....அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும். கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.
கிளீட்டஸ்.....அப்படியிருந்தால் முற்பகல் 10 மணியளவிலும் பிற்பகல் 3 மணியளவிலும் தண்ணீர் குடித்தால் கோபிஃ, மாலை டீ குடிப்பதன் திறன் ஏற்படுமா?
கலை.....நீங்கள் எடுத்து கூறியது சரிதான். அப்போது தண்ணீர் குடித்தால் உடம்பில் நீர் அளவை நிரப்புவது மட்டுமல்ல, மூளை உணர்ச்சியை தூண்டும்.
கிளீட்டஸ்......இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும். அப்படிதானே?
கலை.....ஆமாம். இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது.
கிளீட்டஸ்......எனக்கு புரிந்தது. உடற் பயிற்சியில் ஈடுபடும் போது தண்ணீர் குடிப்பது அறிவியல் முறையில் ஆராய வேண்டும்.
கலை.....ஆமாம். இது பற்றி டாக்டர் சோ போ கருத்து கொண்டுள்ளார். அவருடைய கருத்தை கேளுங்கள்.
கிஷீட்டஸ்.......உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும். தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது. ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை என்றார் அவர்.
கலை........ஆகவே உடற் பயிற்சி செய்த பின் சரியான முறையில் தண்ணீர் குடிக்கும் வழிமுறை என்ன என்றால் முதலில் தண்ணீர் வாய்க்குள்ளே ஈரம் செய்ய வேண்டும். பின் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
கிளீட்டஸ்.....நண்பர்களே இந்த முறை தண்ணீர் எப்படி குடிப்பது என்பது பற்றி கேட்ட பின் உங்கள் வாழ்க்கையில் எதாவது பயந் ஏற்பட்டால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

No comments: