Friday, May 18, 2012


இன்றையநவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் மக்களில் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். மன அழுத்தத்துக்கு என்ன காரணம், அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் சார்பில் 18 நாடுகளை சேர்ந்த 89,000 பேரிடம் 20 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மன அழுத்தத்தில் 12.1 கோடி பேர் பாதிப்படைந்தது ஆய்வில் தெரிய வந்தது. அதில், அதிகபட்சமாக இந்தியர்கள் 36 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் தவிக்கின்றனர். ஆனால், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 12 சதவீதம் பேர் மட்டுமே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மன அழுத்தத்தால் பாதிப்பு அடைவோரின் சராசரி வயது இந்தியர்களுக்கு 31.9 ஆகவும், சீனர்களுக்கு 18.8 ஆகவும், அமெரிக்கர்களுக்கு 22.7 ஆகவும் உள்ளது. அதிக மன அழுத்தத்துக்கு சோகம், குற்ற உணர்ச்சி, குறைந்த சுய மதிப்பீடு, தூக்கம் பாதிப்பு, குறைந்த ஆற்றல், கவனக்குறைவு போன்றவையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணிகளால் உலக அளவில் இந்தியர்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

பெண்களை பொறுத்தவரை கணவனின் இறப்பு அல்லது விவாகரத்து மன அழுத்தத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. அதனால் பெண்களிடம் மன அழுத்த பாதிப்பு தன்மை 2 மடங்காக காணப்படுகிறது.

No comments: