Tuesday, September 13, 2011


 அமெரிக்காவில் இர‌ட்டை கோபுர‌ம் தா‌‌க்குத‌‌ல் இ‌ன்று 10வது ஆ‌ண்டு ‌நினைவு நா‌‌ள்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குத‌ல் நட‌ந்து இ‌ன்று 10வது ஆ‌ண்டை எ‌ட்டியு‌ள்ள ‌நிலை‌யி‌ல் ப‌லியானவ‌ர்களு‌க்கு ஏராளமானோ‌ர் அ‌ஞ்ச‌லி செலு‌‌த்‌தின‌ர். இ‌ந்த ‌நினைவு ‌தின‌த்தையொ‌‌‌‌ட்டி அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

2001 செப்டம்பர் 11ஆ‌ம் தே‌தி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் செயல்பட்டு வந்த இரட்டை கோபுரங்களை அல் காய்தா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதி தகர்த்தனர். இதில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உ‌யி‌‌ரிழ‌ந்தவ‌ர்களு‌க்கு அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌ம் ‌விதமாக இ‌ன்று ஏராளமானோ‌‌ர் மெழுகுவ‌ர்‌த்த‌ி ஏ‌ந்‌தி ‌சில ‌நி‌மிட‌ங்க‌ள் ‌மவுனமாக இரு‌ந்தன‌ர். த‌ங்களது குடு‌ம்ப உறு‌ப்‌பின‌ர்களை இழ‌ந்தவ‌ர்க‌ள் க‌ண்‌ணீ‌ர் வடி‌த்தன‌ர்.

இ‌‌ந்த நிலையில் அவரது கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதை‌த் தொட‌ர்‌ந்து நியூயார்க், வாஷிங்டனில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், பெரிய கட்டடங்கள், இரயில், விமான நிலையங்கள் உள்ளிட்டவை காவ‌ல்துறை‌யி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் உ‌ள்ளது.

இர‌ட்டை கோபுர‌ம் தா‌க்கு‌த‌லி‌ல் ஈடுப‌ட்டு அல் காய்தா பயங்கரவாத இய‌க்க‌த் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த சில மாதங்களுக்கு முன் அமெ‌ரி‌க்கா காவ‌ல்துறை‌யின‌ர் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர் எ‌ன்று கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

No comments: