Tuesday, September 13, 2011

27ஆ‌ம் தே‌தி முத‌ல் செல்போனில் தேவையற்ற அழைப்புக‌ள் வராது ம‌த்‌திய அரசு.


27ஆ‌ம் தே‌தி முத‌ல் செல்போனில் தேவையற்ற அழைப்புக‌ள் வராது ம‌த்‌திய அரசு.

செ‌ல்போ‌னி‌ல் தேவைய‌ற்ற அழை‌ப்புக‌ள், எ‌ஸ்எ‌ம்எ‌ஸ்-க‌ளை தவிர்க்க ம‌த்‌திய அரசு நடவடிக்கை எடு‌த்து‌ள்ளது. வரு‌ம் 27ஆ‌ம் தேதி முதல் இ‌து அமலாகிறது.

செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்.களையும் தவிர்க்க டு நாட் கால் ரெஜிஸ்ட்ரரி பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தற்போது தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு என்று மாற்றப்பட்டு உள்ளது.

தேவையில்லாத அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், இனிமேல் புதிய அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த அமைப்பு சில விதிமுறைகளை வகுத்து உள்ளது. புதிய முறைப்படி தொலைபேசி இலாகா 140 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க விரும்பும் பொதுமக்கள், தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு மையத்தில் பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு 140 என்ற எண்ணை செல் நிறுவனங்கள் அளிக்க முடியாது. இதன் மூலம் தேவையில்லாத அழைப்புகள் தவிர்க்கப்படும். இந்த அமைப்பு வரு‌ம் 27ஆ‌ம் தேதி முதல் செயல்படு‌கிறது.

இதனையு‌‌ம் ‌‌மீ‌றி தேவைய‌‌ற்ற அழை‌ப்புகளை செ‌ல்போ‌ன் ‌நிறுவன‌ங்க‌ள் தொட‌ர்‌ந்தா‌ல் கடுமையான அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌ம‌த்‌திய அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

No comments: