Friday, November 25, 2011

கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.



உணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உண்ணும் உணவும்தான். என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு மருந்து பாதி, உணவு பாதி, இரண்டும் சேர்த்துத்தான் நோயைக் குணமாக்கும். பரவலாகக் காணப்படும் நோய்களில் இருதய நோயும் ஒன்று.

நோய் வருமுன் நம் ஆரோக்கியத்தைக் காக்க ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை. இருந்தாலும் நோய் வந்த பிறகும் மனம் நொந்துவிடாமல் உணவு வகைகளால் நோய் முற்றி விடாமல் நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். `விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம்'.

இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதய நோயாளிகளுக்கான உணவு (1500 கலோரிகள்) உப்பு 2 லிருந்து 3 கிராம் வரை குறைந்த அளவு கொழுப்பு - 15 கிராம் வரை

சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு அதிகாலை ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது டீ ஒரு கப்.

காலை உணவு: இரண்டு இட்லிகள் சாம்பாருடன் அல்லது இடியாப்பம் இரண்டு, அல்லது கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி.

இடைப்பட்ட நேரம்: மோர் அல்லது காய்கறி சூப் அல்லது ஜூஸ்.

மதிய உணவு: நன்றாகக் குழைந்த சாதம், சாம்பார் அல்லது பருப்புடன். காய்கறி இரண்டு வகைகள், தயிர் அல்லது மோர், ஜெல்லி கலந்த பழ சாலட் அல்லது ஏதாவது ஒரு பழம்.

மாலை: அதிக நீர் கலந்த டீ அல்லது ஆடை எடுக்கப்பட்ட பால் ஒரு கப், பிஸ்கட், சுண்டல் அல்லது காய்கறி கலந்த சாண்ட்விச் இரண்டு.

இரவு சாப்பாடு: எண்ணெய் விடாத சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு, பருப்பு, மோர்.

படுக்கச் செல்லுமுன்: ஆடை எடுக்கப்பட்ட பால்.


அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு:

காலை:

ஆடை எடுக்கப்பட்ட பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளலாம். அத்துடன் ஒரு அவித்த முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளலாம்.

இடைப்பட்ட நேரம்:

கொழுப்பில்லாத இறைச்சி சூப் அல்லது கோழி சூப் அருந்தலாம்.

மதியம்:

உணவுடன் கோழிக்கறித் துண்டு இரண்டு அல்லது மீன்கறித் துண்டுகள் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு:

உணவுடன் கொழுப்பில்லாத இறைச்சி ஒரு சில துண்டுகள், பச்சையான காய்கறி சாலட் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

நினைவில் வைக்கவேண்டியவை:

முட்டையின் மஞ்சள் கரு உட்கொள்பவர்கள் வாரத்திற்கு இருமுறைக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. (கேக், சாஸ், டெஸர்ட் வகைகளையும் சேர்த்து).

கோழியும், மீனும் வாரத்தில் 4 தடவைக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பில்லாத இறைச்சி வாரத்திற்கு ஒருமுறை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பில்லாத இறைச்சி, மீன், கோழி இவைகளைச் சமைக்கும் பொழுது கூடுமானவரை கொழுப்புக் கலக்காமல் சமைக்க வேண்டும். எப்படி என்றால். . . நீரில் வேக வைத்தல், ஆவியில் வேக வைத்தல், பேக் செய்தல் மற்றும் அதிக எண்ணெய் இல்லாமல் வறுத்தல்.

தவிர்க்கப்படவேண்டிய உணவு வகைகள்

உப்பு அதிகம் கலந்த உணவு வகைகள், கொழுப்புள்ள உணவுப் பதார்த்தங்கள், வெண்ணெய், நெய் மற்றும் தேங்காய் எண்ணெய், டால்டா, முட்டை மஞ்சள் கரு.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், சிப்ஸ், சமூசா, அப்பளம், பஜ்ஜி, பூரி போன்றவை.

எண்ணெயில் அதிகமாக வறுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் வகைகள்.

தேங்காய், கேக், புட்டிங்ஸ், ஐஸ்க்ரீம் வகையறாக்கள்.

இறைச்சியில் தனிப்பட்ட உறுப்புகள், பன்றி இறைச்சி, எறால் போன்றவை.

பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட கோவா, பாலாடைக் கட்டி, க்ரீம், சீஸ் வகைகள்.

முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள்.

இதய நோயாளிகள் சாப்பிடக் கூடிய உணவு வகைகள்

நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள், வேக வைத்த காய்கறிகள், முளை கட்டிய தானிய வகைகள், தோலுடன் இருக்கக் கூடிய பழங்கள், புழுங்கலரிசி, கோதுமை மாவு மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

சனோலா அல்லது சஃபோலா எண்ணெய். (உபயோகிக்கும் அளவு ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 ஸ்பூன் வரை) பால் ஒரு நாளைக்கு 300 மி.லி. வரை சேர்க்கலாம். ஆடை எடுக்கப்பட்ட பாலின் அளவு ஒரு நாளைக்கு 500 மி.லி. முதல் 600 மி.லி. வரை.

குறிப்பு : அவசியம் மருத்துவர் குறிப்பிட்டபடி எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்

Saturday, November 12, 2011

போதி தர்மன்



                      போதி தர்மன்


போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!
காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!
வரலாறு உங்கள் பார்வைக்கு
 போதி தர்மன்பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான்,பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மனுக்கு நந்திவர்மன், குமாரவிஷ்ணு
பௌத்தவர்மப் பல்லவன் ஆகிய முன்று மகன்கள் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்.
அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன் போதிதர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சிபுரத்தில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்த பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார். இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. போதியின் அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை நியமிக்கிறார். புத்த மத குருவாக மாறியபிறகு, போதி,கி.பி.475-550 கால கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து நாலந்தா சென்று அங்கிருந்து தெற்கு சீனாவிற்குச் செல்கிறார்
இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான்.. எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார்.
மேலும் அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும்,அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட வேண்டுகிறார். SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.
போதி தர்மர் அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார். அங்கு சுமார் 32 ஆண்டுகள் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர்,தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.
இதற்கான கல்வெட்டு அந்த சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.
போதி தர்மர் வாழ்ந்த அந்த "ஷாஓலின் கோயிலை இன்றைக்கும் சீனர்கள் வணங்கி வருகிறார்கள். அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில்‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.
பின்னர் அந்த இடத்திலிருந்து போதி தர்மர் சீனாவின் Guangdongவந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENGஎன்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.
.
அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.
அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் போதிதர்மர் தோற்றுவித்த ஷாஓலின்(Shaolin) பௌத்தக்கோயில்களும் மட்டும் தப்பின.
சீனத்தில் மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன்‘பாமீர் முடிச்சு’ பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்…
போதிதர்மர் கதைகள்
போதிதர்மர் என்பவர் புத்தரின் பிரதான சீடர். ப்ரக்யதாரா என்கிற பெண் துறவியின் உத்தரவுப்படி, இவர் சீன தேசத்துக்குச் சென்றார்.
அவர் சீனத்தை அடைந்ததும், சக்கரவர்த்தி, “வூ’ என்பவர் அவரை வரவேற்று உபசரித்தான்.
போதிதர்மரைக் கண்டு அவன் திகைத்து விட்டான். அவர் ரொம்பவும் கொடூரமானவராகக் காணப்பட்டார். அவருடைய பெரிய கண்களில் குரூரம் இருப்பதாக அவன் நினைத்தான்.
தன்னைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்பவன் “வூ’ அரசன். அதற்குக் காரணம் இருந்தது. அவனைச் சுற்றியிருந்தவர்களெல்லாம், “தாங்கள் கடவுளைப் போன்றவர், என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்ததுதான்.
ஒருநாள் அரசன் “வூ’ போதிதர்மரை பார்த்து, “”நான் மடாலயங்கள் பலவற்றைக் கட்டியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவு அளித்திருக்கிறேன். புத்தரின் கருத்துகளை ஆராய்வதற்காக,ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறேன். புத்தரின் சேவைக்காகவே என்னுடைய அரசும், கருவூலமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் வெகுமதியாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டான்.
“”எதுவும் கிடைக்காது. நரகத்தைத் தவிர” என்றார் போதிதர்மர்.
“”நான் என்ன தவறு செய்தேன். நல்லது செய்தவனுக்கு நரகமா?புத்தத் துறவிகள் சொல்கிற புனித காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனே!” என்றான்.
“”உன்னுடைய சொந்தக் குரலை நீ கேட்காதவரை யாராலும் உனக்கு உதவ முடியாது. உனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலை நீ கேட்டதில்லை. அதைக் கேட்டிருந்தால் இப்படியொரு முட்டாள்தனமாக கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய்,” என்றார் போதிதர்மர்.
“”பேராசை கொண்ட மனதுக்குப் பிரதியாய் புத்தர் எந்தவொரு வெகுமதியும் தருவதில்லை. புத்தரின் போதனைகள் எல்லாமே ஆசையின்மை பற்றியதுதான்,” என்றார்.
தாங்கள் சொல்கிற உள்ளிருந்து ஒலிக்கும் குரலை நான் கேட்டதில்லை. எனக்குள் எழுகிற எண்ணங்களால் ஏற்படும் ஓயாத இரைச்சலில், நான் அதைக் கேட்கத் தவறியிருப்பேன். அந்தவகையில் தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டான்“வூ’ அரசன்.
“”அப்படியானால் விடியற்காலை நான்கு மணிக்கு நான் தங்கியிருக்கும் இடத்துக்கு நீ வந்துவிடு. உன்னோடு மெய்க்காப்பாளர்களைக் கூட அழைத்து வரக்கூடாது,” என்றார் போதிதர்மன்.
அதிகாலை நான்கு மணிக்கு, “வூ’ அரசன் அங்கே சென்றபோது,அவருக்கு முன்பாக போதிதர்மர் அந்த இடத்துக்கு வந்து விட்டார். அவருடைய கையில் கம்பு ஒன்று இருந்தது.
“கம்பை வைத்துக் கொண்டு இவர் எப்படி ஒரு மனதை அமைதிப்படுத்தப் போகிறார்’ என்று எண்ணிக் கொண்டான் அரசன்.
“”ம்… இந்தக் கோவில் முற்றத்தில் உட்கார்ந்துகொள்,” அதட்டலாக கூறினார் போதிதர்மர். அவனும் அப்படியே அமர்ந்தான்.
“”உனது கண்களை மூடிக்கொள். உனக்கு முன்பாக எனது கையில் கம்புடன் நான் அமர்ந்திருக்கிறேன். உனது கண்களை மூடிக் கொண்டாயா? அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடி. மேலும்,மேலும் உள்நோக்கிச் செல். அதை கண்டுபிடித்து, “அது இங்கே இருக்கு’ என்று எனக்குச் சொல். மற்றதை என் கையில் உள்ள கம்பு பார்த்துக் கொள்ளும்,” என்றார் போதிதர்மர்.
மெய்ப்பொருளை அல்லது அமைதியைத் தேடுகிற எவரும் அத்தகைய அனுபவத்திற்குள்ளாகியிருக்க மாட்டார்.
அரசன் உள்நோக்கிப் பயணித்தான். தன் மனதைக் காண முயன்றான். ஆனால், அதைக் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“இதோ இருக்கிறது’ என்றோ “எதுவுமே இல்லை’ என்றோ சொல்வதற்கு அவன் அஞ்சினான்.
மனித சஞ்சாரமற்ற இந்த இடத்தில், போதிதர்மர் என்கிற இந்த அபாயகரமான மனிதன் தன்னை எதுவும் செய்யக்கூடும். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை; தன்னிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை. இப்படியான எண்ண ஓட்டம் கலக்கத்தைத் தந்தது, “வூ’அரசனுக்கு.
நேரம் ஓடியது. நிசப்தமான மலைப்பகுதியில் இளங்காற்று வீசியது. சூரிய ஒளி எங்கும் பரவத் தொடங்கியது.
போதிதர்மர் உறுமினார்.
“”எவ்வளவு நேரம்… இன்னும் மனதைக் கண்டுபிடிக்கவில்லையா?”என்றார்.
“”உமது கையிலுள்ள கம்பைப் பயன்படுத்தாமலே என்னுடைய மனதின் இரைச்சலை அகற்றி விட்டீர்!” என்றான் “வூ’ அரசன்.
அவனுடைய முகத்தில் எல்லையற்ற அமைதி காணப்பட்டது.
போதிதர்மர் எதையும் செய்யாமலே அரசனை முழுமையாக மாற்றிவிட்டார்.
“”தற்போது நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு செயலும் அதற்கான வெகுமதியைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு செயலும் தானே தண்டனையாகி விடவும் கூடும். அவரவர் விதிக்கும் அவரவரே எஜமானர். வெகுமதியோ,தண்டனையோ நம்மையன்றி வேறு எவராம் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை,” என்று சொன்னார், “வூ’ அரசன்.
இதைக் கேட்ட போதிதர்மர், “”நீ இங்கே வருவாய் என்று எனக்குத் தெரியும்.நாம் போவதா, வேண்டாமா என்று இரவு முழுக்க உனக்குள் விவாதித்துக் கொண்டிருந்தாய்.
எதுவுமே இல்லாத ஒரு ஏழைக் துறவி நான். என் கைத்தடியைத் தவிர என்னிடம் வேறு என்ன இருக்கிறது? பேரரசனான நீ என்னைக் கண்டு பயந்தது எவ்வளவு கோழைத்தனம். பார், இந்தக் கம்பைக் கொண்டு உன்னுடைய மனதை நான் அமைதிப்படுத்திவிட்டேன்.
ஆனாலும், நீ ஒரு அருமையான சீடன். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை மதிக்கிறேன். ஒரே அமர்வில் இந்த அளவு விழிப்புணர்வை வேறு யாரும் அடைந்திருக்க முடியாது. உன்னுடைய இருண்ட மனதில் பேரொளி பரவி விட்டிருப்பதை நான் காண்கிறேன்,” என்றார் போதிதர்மர்.
சீனத்தில் இருபது லட்சம் துறவிகள் இருந்தனர். ஆனால், அவர்களுள் நான்கு பேர்களை மட்டுமே தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டார் போதிதர்மர்.
தம்முடைய முதல் சீடரைக் கண்டு பிடிக்கவே ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று அவருக்கு. சீடரின் பெயர் ஹூய்-கோ.
“தகுதியான சீடன் தம்மை வந்தடையும்வரை மக்கள் கூட்டத்தைப் பார்க்க மாட்டேன்’ என்று கூறியிருந்தார் அவர். ஒன்பது ஆண்டுகளுக்கு வெற்றுச் சுவற்றையே உற்றுக் கவனித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.
ஹூய்கோ வந்தார். தம்முடைய கையொன்றை வாளால் வெட்டினார். வெட்டுண்ட கையை போதிதர்மரின் முன்பாக வீசி, “”உங்கள் பார்வையை என் பக்கம் (சுவற்றிலிருந்து) திருப்பாவிடில், எனது தலை தங்கள் முன்னிலையில் வந்து விழும். ஆம், என்னுடைய தலையையும் நான் துண்டிக்கப் போகிறேன்,” என்றார்.
“நீ தகுதியானவன்; தலையை இழக்கத் தேவையில்லை, நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம்,” என்றார் போதிதர்மர்.

Sunday, November 6, 2011

தஞ்சை பெருங்கோயில்


ராஜராஜேச்சரம் அமைப்பு - பகுதி 2           

www.sankarnetwork.blogspot.com
 
 
 
தஞ்சைப் பெரிய கோயிலின் கோட்டைச் சுவர்,  வாயில் மற்றும் அதன் வளைவு மண்டபம் ஆகியவற்றை  முதல் பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள பகுதிகளைப் பற்றிய விளக்கம் இப்பகுதியில் தொடர்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வாயிலை கடந்து செல்லும் போது 5 அடுக்குகளுடன் கேராளந்தகன் திருவாயில் எனப்படும் கோபுரம் வருகின்றது. அதற்கு அடுத்து 3 அடுக்குகளுடன் உள்ள இராஜராஜன் திருவாயில் இருக்கின்றது.
 
 
 
 
1.தட்சிண மேரு என்னும் ஸ்ரீவிமானம்
 
பாகம் 1 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் என்னும் பிரகதீஸ்வரப் பெருமாள் கோயில் கொண்டு திகழும் நெடிதுயர்ந்த ஸ்ரீவிமானத்தின் பெயர் தட்சிணமேரு என்பதாகும். இது தரையிலிருந்து 216 அடி உயரமுடையதாகும்.  இப்பகுதி பீடம் முதல் ஸ்தூபித்தளம் வரை கருங்கற்கொண்டு கட்டப்பெற்றதாகும். உள்ளே சிவலிங்கம்; அதைச் சுற்றி நான்கு சுவர்கள். அதற்குப் பிறகு மேலும் நான்கு சுவர்கள் இப்படி வடிவமைக்கபப்ட்டுள்ளன. இவ்வளவு உயரமான இந்த விமானம் முழுவதும் உட்கூடு பெற்றது. வாயகலமான கூம்பு போன்ற குவளையைத் தலைகீழாகக் கவிழ்த்தது போன்ற அமைப்புடையது இப்பகுதி.
 
கருவரையின் நடுவே பெரிய லிங்கத்திருமேனி உள்ளது. இதன் உயரம 13 அடி ஆகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
2.வெவ்வேறு விதமான லிங்கங்களைப் பற்றிய விளக்கம்!
 
பாகம் 2 : 
 
 
 
 
 
லிங்க வடிவமாக இறைவன்,  பிரபஞ்ச வடிவமாக அருவ நிலையாக இருக்கும் இறைவன் என வெவ்வேறு வகையில் ஆலயம் அமைக்கபப்ட்டிருகின்றது.அருவுருவமான இறைவனைக் காட்டி, அடுத்து உருவமற்ற சூன்யத்தையும் காட்டி பின்னர்  உருவகப்படுத்தி சிவ நடராஜராக பரிணமிக்கும் தத்துவத்தை  உணர்த்தவும் இங்கே ஓரிடத்தை  உருவாக்கியிருக்கின்றான் இராஜ ராஜன். அதனை விளக்கமாகச் சொல்கின்றார் இப்பகுதியில்.
 
 
 
3. நீர்வடிவமான கோபுரம் கங்கா புத்திரர்கள் 8 பேரை இக்கோபுரத்தில் காணலாம்.
 
பாகம் 3 : 
 
ஊணக்கண்களால் பார்க்க முடியாத மஹா மேரு பர்வதத்தை உருவகப்படுத்தி கற்பனையில் வடிவங்களுக்கு உரு கொடுத்து அதனை சிற்ங்களாக இந்தக் கோபுரத்தில் வடிக்கச் செய்திருக்கின்றார் இராஜராஜன்.  முன்னர் இப்பகுதியில் தங்கத்தினால் போர்த்தியிருந்ததாக இராஜராஜனின் கல்வெட்டு கூறுகின்றது. பினன்ர் மாலீக் கபூர் காலத்தில் தங்கம் சுரண்டி கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. 
 
 
 
4.சதாசிவலிங்கம்
 
பாகம் 4 : 
 
ஆலயத்தின் முழு வடிவத்தையும் சதாசிவ லிங்கமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
 
கருவறையின் சுற்று அறைக்கு மேல்  பகுதியில் மற்றுமொரு சுற்று அறை உள்ளது. கீழ்ச் சுற்று அறையின் சுவரில் சோழர் கால  ஓவியங்களும், நாயக்கர்கால ஓவியங்களும் உள்ளன. மேலறையில் சிவபெருமானின் கரணச்சிற்பங்களின் தொகுதி உள்ளது. 108 கரணச்சிற்பங்களில் 80 மட்டுமே பூர்த்தியாக உள்ளன. மற்றவை செதுக்கப்பெறவில்லை. சுற்று உள் வட்ட வடிவமான அறையின் மேல் பகுதி எப்போதும் குளிர்ச்சியாக இருக்குமாம்.  காற்றை பிரதி நிதிப்பதாக இவ்வமைப்பு உள்ளது.
 









இந்த கோபுரத்தில் உள்ள சிலைகளை பெரிதாக்கபப்ட்ட உருவங்களை கீழே காணலாம்.




















Saturday, November 5, 2011

குழந்தைகளுக்கு இனி இப்படித்தான் A,B,C,D கற்றுக்கொடுப்பார்களோ?


ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. 


இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.


காமத்தை அடக்கும் வழிகள்



உலகில் மனிதனுக்கு எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளைப் பிறப்பிக்க வேண்டும். அதன் பின்னர் உடல் தன்னை தயார் செய்துகொண்டு உறவில் இறங்குகிறது. ஆனால், இந்தக் காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்தக் கருத்துக்கலோடு, வேரொருவரையும் ஆலோசிக்கிறது.
அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன்-கள் தான் அவை. பெண்களின் காம உணர்வைவிட விரைவாக காம உணர்ச்சி ஆண்களுக்கு ஏற்படுகிறது. அவனது காமப் பசியை அதிகமாக மறைத்து வைப்பதில்லை. உடலுறவின்போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். (பெண்களைவிடக் குறைவுதான்).


ஆண் தனது காம உணர்வை வெளிப்படுத்த பல வழிகளையும் கையாள்வதுண்டு. உதாணரமாக ஒரு ஆண் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்கும் போது எந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள். அவனாலும் தான் நினைத்தப் பெண்ணை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.  உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் இல்லையென்றே கூறலாம்.

அதிகமான காம உணர்வு உள்ள ஒரு ஆண் பல பெண்களுடன் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச் சேர்க்கை பல முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு. காம உணர்வானது மனிதர்களின் கற்பனையில் பல முறைகளில் கையாளப்பட்டு வருகிறது.

ஸேடிசம் (Sadism) என்பது காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப்பட வைத்து அந்த வேதனையை சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும் ஒரு அரக்கத் தன்மை உடையதாகும்.

இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர மடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது.

காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்வதை நாள்தோறும் வெளிவரும் செய்திகளின் ஊடாக அறிய முடிகிறது. காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. பெரும்பாலும், இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது.

இதிலிருந்து நாம என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால் சாதாரண மனித செயற்பாடுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தைவிட உயர்ந்த அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டுத்தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும்.

அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் Inconscient நிலைக்குச் சென்றுவிடும். உணவுப் பழக்கம் என்பது பல்வெறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக இருக்கிறது. உதாரணமாக துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் (உண்மையானவர்கள்) ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.

உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்துவிட முடியும் என்று எண்ணக்கூடாது.

வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டு சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்த வழியாகும். ஆனால், இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்குத் தெரியாது. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம். உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகள் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம்.

காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும். உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாக வேண்டும். பாலுணர்வுகளை மனதளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம். மனிதனைப் பொறுத்தவரை அது இலகுவானது. அதற்கு ஆண்கள், பெண்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள், நோய்கள், பெருகுவதும், கருக்கலைப்புக்கள் தொடர்வதும் தவிர்க்கப்படும்.

Thursday, November 3, 2011

ஏற்றத் தாழ்வை நீக்குவதே மாபெரும் மனித சாதனையாக இருக்கும்: பில் கேட்ஸ்



மானுட வாழ்வில் நிலவிவரும் ஏற்றத் தாழ்வை நீக்குவதே மானுடத்தின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பேசிய மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

ஹாவர்ட் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான பில் கேட்ஸ், அதன் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, அதனை ஏற்று சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஹார்வர்ட் பல்கலையில் படித்தது எனது வாழ்வின் குறிப்பிடத்தக்க அனுபவமாகும். இங்கிருந்துதான் எனது வாழ்க்கை தொடங்கியது. 1975ஆம் ஆண்டு இங்கு படித்துக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு வந்த அந்த அழைப்பு இன்றுவரை நீடித்துவரும் மைக்ரோசா்ப்ட் நிறுவன வாழ்விற்கு அடித்தளமிட்டது.

ஹார்வர்டில் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் பற்றிப் படித்தேன். ஆயினும், மானுடத்தின் மிகப் பெரிய சாதனை என்பது புதிய, புதிய கண்டுபிடிப்புக்களில் இல்லை. மாறாக, அப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், மனித குலத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வை களைய எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் உள்ளது.

ஜனநாயகம், வலிமையான பொதுக் கல்வி, தரமான மருத்துவ வசதி, விரிவான பொருளாதார வாய்ப்புகள் என்று எதுவானாலும் சரி, அவை யாவும் ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும் - அப்போதுதான் அது சாதனையாகும்.
எல்லா வசதிகளும் உள்ள இந்த நேரத்தில் நீங்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறீர்கள். நாங்களுக்கு கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள் யாவும் உங்களுக்குள்ளது. ஏற்றத் தாழ்வு தொடர்பாக நீங்கள் அறிந்துள்ள அளவிற்கு நாங்கள் அறியவில்லை. இந்த அளவிற்கு ஒரு புரிந்துணர்வோடு பட்டம் பெற்றுள்ள நீங்கள், உங்கள் சிறிய முயற்சியால் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல திறமையை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதையும் செய்யாமல் இருப்பீர்களானால் அது உங்களை என்றென்றைக்கும் வாட்டிக்கொண்டிருக்கும். நாங்கள் பெறாததை நீங்கள் பெற்றுள்ளீர்கள், உடனடியாகத் தொடங்குங்கள், நீண்ட காலம் உங்கள் பணியை தொடருங்கள்.

ஏற்றத் தாழ்வை ஒழிக்கத் தேவையான மாற்றம் சாதாரணமானதல்ல, அது மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கல்களை வெட்டி வீழ்த்தித் தீர்வு காண நான்கு படி நிலை பாதை உள்ளது. அது, 1. இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும், 2. அதனை அடைய அதிகபட்ச சாத்தியமுடைய அணுகுமுறையை கண்டுபிடிக்க வேண்டும், 3. அதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும், 4. அந்த தொழில்நுட்பம் நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றாக - மிக அதிக விலையுள்ள மருந்தாகவோ அல்லது மிகச் சாதாரணமான படுக்கை வலையாகக் கூட இருக்கலாம் - அதனை கண்டறியுங்கள்.

முதலில் பிரச்சனையை கண்டறிய வேண்டும். அதற்கான தீர்வு என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதனால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட வேண்டும். பிரச்சனையின் சிக்கல் உங்களை தடுத்து நிறுத்திவிட அனுமதிக்காதீர்கள், செயல்படுங்கள், மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு எதுவெனப் பார்த்து கையில் எடுங்கள். அதனைச் சாதிப்பதில்தான் உலகின் உன்னதமான அனுபவம் உள்ளது.

உங்களுடைய திறன் என்பது நீங்கள் பெற்றுள்ள கல்வித் தகுதி மட்டுமே ஆகாது, அந்தத் திறனைக் கொண்டு இவ்வுலகில் நிலவும் மிக ஆழமான ஏற்றத் தாழ்வை நீக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதிலயே உள்ளது. உங்களிடமிருந்து வெகு தூரத்திலுள்ள அந்த மக்களோடு உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, ஆனால், அவர்களையும் சேர்ந்ததே மானுடம் என்பதை புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்.

(ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் பில் கேட்ஸ் ஆற்றிய உரை)