பிரமாண்டமாக இடம்பெற்று முடிந்த இளவரசர் வில்லியம் திருமணம்!
இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன் ஆகியோரின் திருமண அதிகாரபூர்வமாக, வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் இனிதே நிறைவேறியது.
இந்தத் திருமண வைபவம் மற்றும் அதனோடு இணைந்த மணமகன் மணமகள் ஆகியோரின் ஊர்வலம் என்பனவற்றைக் காண்பதற்காக லண்டன் நகர வீதிகளில் இன்று காலை முதலே பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர்.
உள்ளுர் நேரப்படி காலை 8.30முதல் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர்.

உலக நாடுகள் பலவற்றின் ஊடகவியலாளர்கள் ஏற்கனவே லண்டன நகரில் குவிந்திருந்தனர்.

பல ஊடக நிறுவனங்கள் காலை முதலே விவரணங்களுடன் கூடிய நேரடி ஒலி, ஒளிபரப்புக்களை வழங்க ஆரம்பித்துவிட்டன.

பிரிட்டனின் பிரபல பாடகர் சேர் எல்டன் ஜோன், அரச குடும்ப உறுப்பினர்கள், பல வெளிநாட்டுப் பிரமுகர்கள், மன்னர்கள், உட்பட அழைக்கப்பட்ட பிரமுகர்கள் தேவாலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இங்கிலாந்து அரசகுடும்ப முறையில் அதிகார பூர்வமாக திருமணச் சடங்கு இடம்பெற்றது.



No comments:
Post a Comment